ஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது.?
ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்தும்போது, அக்கேமராவிற்கென பல்வேறு சிறப்பு அம்சங்களை குறிப்பிடுகின்றன. அவற்றை முறையாக பரிச்சித்து பார்த்து புரிந்துக்கொள்வது அவசியமாகும்.
லிட்டருக்கு இத்தனை கிலோடு மீட்டர் கொடுக்கும் என்று ஒவ்வொரு இருசக்கர / நான்கு சக்கர வாகனங்களுக்கு அதன் நிறுவனங்கள் கொடுக்கும் வாக்குறுதியைப்போன்றதுதான் இதுவும். அதாவது, முறையான, தரமான, சோதனைச் சாலையில் ஓடும் போது, அவர்கள் குறிப்பிடும் அளவில் மைலேஜ் கொடுக்கும், பொது பயன்பாட்டிலிருக்கும் சாலையில் அவர்கள் கொடுக்கும் மைலேஜை எவ்வாகனமும் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம். அதேப்போலத்தான் இங்கேயும்…
கேமரா நிறுவனங்கள் சொல்லும், அத்தனை சிறப்பு அம்சமும், எத்தனை சதவிதம் நடைமுறைக்கு ஒத்து வரும் என்பதை நாம்தாம் பரிச்சித்து அறிந்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, கேமராவை சோதிக்கும்போது.. அதன் அதிக பட்ச தாங்கும் திறனை சோதித்துப்பார்ப்பது என் வழக்கம். அதாவது..
பல்வேறு ஒளிகளில்
ஒரு நாளில் பல்வேறு பொழுதுகளில்
வெயில், மழை
குறைந்த ஒளி
மிருகங்கள், பறவைகள்
செடி, கொடி, மரம், வயல், கடல்
நீர், சூரியன், நிலா
முறையான, சரியான, நேர்த்தியான முறையில்.. அழகு நிறைந்த இடங்களை படமெடுத்தால் எந்த கேமராவும் அழகாத்தான் பதிவு செய்யும். அதிலிருந்து அக்கேமராவின் தகுதியை புரிந்துக்கொள்ள முடியாது. அதனால் தான், நாம் வாழுமிடத்திற்கு அருகிலிருக்கும், இயல்பான சூழலை படம் பிடித்து பார்த்திருக்கிறேன்.
ஒரு கேமராவின் தகுதி என நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது.