கிரௌண்ட் எர்த் அவசியமா ....?

Comments · 11599 Views

இந்த கட்டுரையில் நாம் அன்றாடம் பயன் படுத்தும் உபகாரணங்களுக்கு கிரௌண்ட் எர்த்ன் முக்கியத்துவம் குறித்து அமைக்கப்பட்டுள்ளது

  • கிரௌண்ட் எர்த் என்றல் என்ன ?

 

கிரௌண்ட் எர்த் என்பது நாம் பயன்படுத்தும் அணைத்து உபகரணங்களின்  மின்கசிவால் ஏற்படும் பழுதுகில் இருந்து பாதுகாப்பது மட்டும் அல்லாமல் மனிதர்களை அசம்பாவிதம் மற்றும் உயிரிழக்கும் ஆபத்துகளில் இருந்து காக்கும்.

  • மின்கசிவு எப்படி ஏற்படுகிறது

Image result for leakage current

 

நமது உபகாரணகளுக்கு மின் விநியோக தேவை சுமார் 220v வோல்ட்டேஜ் முதல் 240v வோல்ட்டேஜ் வரை தேவை படலாம் இவை பொதுவாக AC (அல்டெர்னட் கரண்ட் என வகை படுத்தப்பட்டுள்ளது )

  • அல்டெர்னட் கரண்ட் எடுத்துக்காட்டு படம்

Image result for alternet current 

இந்தகைய ac மின்சாரத்தை நம் உபகாரணங்களுக்குள் நேரடியாக செலுத்தினாலும் இந்த செலுத்தப்பட்ட மின்சாரம் ஆனது வேறு ஒரு நிலைக்கு மாற்றப்பட்டு மின்சாரத்தின் அளவை குறைத்து 12V ,24V என நம் உபகாரணங்களுக்கு தேவையான அளவு மட்டும் செல்லும் அத்தகைய மின்சாரவகை DC (டைரக்ட் கரண்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)

  • டைரக்ட் கரண்ட் எடுத்துக்காட்டு படம்

Image result for direct  current 

இந்த நிலையில் AC -DC  மின் மற்றதை ஏற்படுத்த பல்வேறு கருவிகள் நம் உபகாரணத்துக்குள் செயல்படும் அதில்  சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.

டிரான்ஸ்பார்மர் (Transformer with rectifier )

  • டிரான்ஸ்பார்மர் எடுத்துக்காட்டு படம்

Image result for 220 transformer with rectifier 

 

Image result for mutual inductance

 

  • ரேக்டிபியர் எடுத்துக்காட்டு படம்

    Image result for 220  rectifier

 

SMPS (SWITCHING MODE POWER SUPPLY  )

  • SMPS எடுத்துக்காட்டு படம்

Image result for smps pcb amazon

  • இத்தகைய கருவிகளை கொண்டு நம் உபகாரணத்துக்கு தேவையான அளவு மின்சாரத்தை கட்டுப்படுத்தும் பொழுது சிறிதளவு leakage curret உருவாகும் , இவை டிரான்ஸ்பார்மர்ராய் விட SMPS இல் அதிகம் வெளியேறும் 
  • லீக்ஏஜ் கரண்ட்  எடுத்துக்காட்டு படம்

இப்படி வெளியேறும் மின்சாரம் நம் உபகாரங்களின் மேலுள்ள இரும்பு கவசத்தில் [CASE] பாய்ந்து அவ்வப்போது அதை நம் கைகளால் தொடும்பொழுது சிலு சிலு வென மின்சாரம் நம் மேல் பாய்வதை நாம் உணருவோம் , இது பொதுவாக அணைத்து SMPS பொருந்தியுள்ள உபகாரணகளிலும் ஏற்படும் , இந்த நிலையில் அந்த உபகாரணத்தில் பழுது ஏற்பட்டாலோ அல்லது ஒயர்கள் பழுது ஏற்பட்டு அது நமது உபகாரணித்தின் இரும்பு கவசத்தில் தொடர்புகொண்டால் நேரடியாக 220V மின்சாரமும் நாம் அந்தஉபகரணத்தை தொடும் பொழுது தாக்கும், அதுமட்டுமல்லாமல் அத்தகைய உபகரணம் முற்றிலுமாகவோ அல்லது அதன் பகுதிகளை பாதிக்கலாம்.

இந்த நிலையில் இருந்து நம்மையும் நமது விலைஉயர்ந்த  உபகாரணகளும் பாதுகாக்கவே கிரௌண்ட் எர்த் அவசியமான ஒன்றாகும்.

 

  • கிரௌண்ட் எர்த்இன் முக்கியத்துவம்

பொதுவாக நம் பயன் படுத்தும் கணினிகள் , ஸ்டூடியோ உபகரணங்கள் மற்றும் strobe லைட்டுகளின் மின்சார பிளக்கை உற்று நோக்கினால் அதில் கிரௌண்ட் பின் என்பது சற்று தடிமனாகவும் நீளமாகவும் அமைந்து இருப்பதை நாம் கவினிக்கலாம் அவை ஏன் அப்படி அமைக்கப்படுள்ளது என நாம் ஒருபோதும் சிந்தித்து உண்டா  ...? வாய்ப்புகள் குறைவு..!

Image result for 3 pin plug


இந்த இடத்தில் நான் ரெசிஸ்டன்ஸ் பற்றிய சில விஷயங்களை சொல்லி ஆகவேண்டும் 

  • ரெசிஸ்டன்ஸ் எடுத்துக்காட்டு

    Image result for voltage current resistance gif animation

எலெக்ட்ரோனிக்ஸில் உள்ள ஒரு சிறிய விதி எங்கு ரெசிஸ்டன்ஸ் அதிகம் ஏற்படுகிறதோ அங்கே மின்சார இழப்பு ஏற்பட்டு circuit வேலை செய்யாது / முதலில் வேலை செய்ய தொடங்காது மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள் R1,R2,R3 என்பது மூன்று வகையான மின்சார விளக்குகள் என கருதுவோம் இதில் R1 மஞ்சள் நிற விளக்கு மற்றும் R3 பிரௌன் நிற விளக்கு இவை இரண்டும் அதிக ரெசிஸ்டன்ஸ் கொண்டது அதே சமயம் R 2 சிகப்பு நிற விளக்கு குறைந்த ரெசிஸ்டன்ஸ் கொண்டது நான் முன்பு கூறியதுபோல எங்கு ரெசிஸ்டன்ஸ் அதிகம் ஏற்படுகிறதோ அங்கே மின்சார இழப்பு ஏற்பட்டு circuit வேலை செய்யாது / முதலில் வேலை செய்ய தொடங்காது 

R2 வில் உள்ள புள்ளிகள் சீக்கிரம் வலது பக்கம் இருந்து இடது பக்கம் வேகமாக கடப்பது நாம் பார்க்கமுடிகிறது ஆகையால் ஸ்விட்ச்சை ஆன் செய்த உடன்  R 2 சிகப்பு நிற விளக்கு முதலில் இயங்கும் 

இதே விதி தான் கிரௌண்ட் எர்த்கும் பொருந்தும் 

மீண்டும் பிளக்குக்கு வருவோம்

Image result for 3 pin plug

  • நாம் முதலில் பிளக்கை சொருக முட்படும் பொழுது முதலில் தொடர்புகொள்வது கிரௌண்ட் பின்அகா இருக்கவேண்டும் என்பதற்காக அது சற்று நீளமாக வடிவமைக்க பட்டுள்ளது ,மேலும் எந்த வகையிலும் ரெசிஸ்டன்ஸ் அதிகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சற்று தடிமனாகவும் வடிவமைக்க பட்டுள்ளது...!

இப்பொழுது புரிகிறதா நண்பர்களே கிரௌண்ட் எர்த்தின் முக்கியதுவம் கருத்தில் கொண்டு ஒரு சாதாரண பிளக் எவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்க பட்டுள்ளது என்று ...?

  • முறையான கிரௌண்ட் எர்த் ஏவ்வாறு அமைந்திடல் வேண்டும்....? 

 

நமது அன்றாட வாழ்வில் காணும் சில கிரௌண்ட்எர்த் முறைகள் 

  • பூத்தொட்டி மூலம் ஒயர்களை பொருத்தி கிரௌண்ட்எர்த் பெறுவது (முற்றிலும் தவறு )

Image result for ground earth flower pot

 

  • ஜன்னல் கம்பி மற்றும் சுவற்றில் ஆணி அடித்து கிரௌண்ட்எர்த் பெறுவது ( தவறு ) 

Image result for iron window

  • குழி தோண்டி பைப்பை நட்டு கிரௌண்ட்எர்த் பெறுவது (மிக சரி )

Image result for ground earth pit 

எப்படி கிரௌண்ட் எர்த் அமைப்பது சரி (Earth Rod Inspetion Box)

 

  1. நன்கு தோண்டப்பட்ட குழிக்குள் உப்பு,நிலக்கரி அல்லது அடுப்பு கரி ஆகியவற்றை வைத்து முறையாக அமைக்கப்படவேண்டும்.  
  2. உப்பு ஈரப்பதத்தை உண்டாகும் கரி ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஆகையால் ரெசிஸ்டன்ஸ் குறையும் நல்ல கிரௌண்ட் கிடைக்கும். 
  3. கிரௌண்ட் ஒயரின்  இடையே எந்த ஒரு துண்டும் இருக்க கூடாது. 
  4. இந்த கட்டுரையில் சிறு எடுத்து கட்டு மற்றும் எளிமையாக கூறி உள்ளேன் மேலும் விளக்கங்களுக்கு கமெண்ட் பகுதியை பயன் படுத்துங்கள் நன்றி

ஈரோடு பூபதி 98427 96601 admin@olippathivaalan.com

Comments
PRABAHARAN AM 5 yrs

Very useful

 
 
Joy Vinodh 5 yrs

Thanks for the info sir