Wide vs Telephoto lens Article By Vijay Armstrog (cinematographer Tamil film industry )

Wide Vs Tele Lens

 
 
 
இரண்டு படங்களுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசம், இரண்டும் வெவ்வேறு ‘ஃபோக்கல் லென்ந்த்’ (Focal Length ) கொண்ட லென்சுகளால் எடுக்கப்பட்டது என்பதுதான். படம் A - 80mm லென்ஸாலும், படம் B - 24mm லென்ஸாலும் எடுக்கப்பட்டது. 
 
35mm ஃபார்மேட்டில், 50mm (Normal Lens)-க்கு மேற்ப்பட்ட ஃபோக்கல் லென்ந்த்தை ‘Tele Lens’ என்றும், அதற்கு கீழான ஃபோக்கல் லென்ந்த்தை ‘Wide Lens’ என்றும் அழைக்கிறோம்.
 
Wide Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு அதிகம் என்பதை நாம் அறிவோம். கூடவே, Wide Lens லென்ஸுகளில் படம் பிடிக்கும்போது கேமராவிற்கு அருகிலிருக்கும் பொருட்கள் பெரிதாகவும், கொஞ்சம் Distortion-வோடும் இருக்கும். பின்புலக்காட்சிகள் சிறிதாக, தூரத்தில் இருப்பதைப்போன்றும் தெரியும். 
 
Tele Lens லென்ஸில் படம் பிடிக்கும் போது, அது பார்க்கும் பரப்பளவு குறையும், அதாவது கோணம் ‘Narrow’-வாகும். மேலும், படம் பிடிக்கப்படும் Subject-ம் அதன் பின்புலமும் நெருக்கத்திலிப்பதைப் போன்று தோன்றத்தை உண்டாக்கும். 
 
Subject-ஐ மட்டும் மையப்படுத்தி, அதனை அதன் பின்புலங்களிலிருந்து பிரித்து காட்ட, டெலி லென்ஸ் நன்கு பயன்படும். காட்சிக்கு தேவையில்லாதவற்றை தவிர்ப்பது, Shallow Focus -ஐ அதிகரிப்பது போன்றவற்றில் மூலம் இது சாத்தியப்படும்.
 
Subject-வுடன், அதன் பின்புலத்தை காட்சிப்படுத்த வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படும். குறிப்பாக குளோசப் சுடுவில்(shot) இத்தகைய நுட்பம் பயன்படும். ஒரே அளவு composition தான் என்றாலும், வைட் ஆங்கிள் மற்றும் டெலி லென்ஸின் பிம்பங்கள் வெவ்வேறாக இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். 

 
நான் ஒளிப்பதிவாளராக பணி புரிந்த, மாத்தியோசி எனும் திரைப்படம், வறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அந்த இளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள். 
 
கிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென்சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதனால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னை அவர்களுக்கு அந்நியமானதும் என்பதையும், சென்னையில் அவர்கள் தனித்து விடப்பட்டார்கள் என்பதையும் உணர்த்தும் விதமாக லென்ஸுகளை பயன்படுத்தினோம். 
 
Maathi Yosi

Mathi Yosi

Mathi Yosi
 

பிரபல ஹாலிவுட் படமான ‘Revenant’ திரைப்படம் முழுவதும் 12mm - 21mm லென்ஸுகளை மட்டும் கொண்டு படம் பிடித்ததாக அதன் ஒளிப்பதிவாளர் ‘Emmanuel Lubezki’ சொல்லுகிறார். தமிழில் ஒளிப்பதிவாளர் ‘Santhos Sivan’ இயக்கிய ‘Terrorist’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் படம் பிடிக்கப்பட்டது, குறிப்பாக Macro Lens-களை அதிகம் பயன்படுத்தியதாக சந்தோஷ் சிவன் சொல்லுகிறார். இவ்விரண்டு படங்களையும் வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள், வைட் ஆங்கிள் லென்ஸின் பயன் புரியும். அதேப்போல ஹாலிவுட் இயக்குநர் ‘Terrence Malick’ தன்னுடைய படங்களை பெரும்பாலும் வைட் ஆங்கிள் லென்ஸுகளால் தான் படம் பிடிக்கிறார். 
 
Revenant
 
Terrorist
 
 
Comments