இருபரிமாணம் Vs முப்பரிமாணம்

Comments · 21891 Views

இருபரிமாணம் Vs முப்பரிமாணம் Aritcle by Vijay ArmStrong Cinematographer tamil film industry

இருபரிமாணம் Vs முப்பரிமாணம்

 
 
 
எதார்த்தத்தில், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி, முகம், பாதை என எல்லாம் முப்பரிமாணத்தன்மைக்கொண்டவைகள். 
 
அதாவது, ஒரு பொருளின் உயரம் (height), அகலம் (width) மற்றும் ஆழம் (Depth) இருப்பதை நாம் பார்க்க முடியும். 
 
முகம் என்றால், அம்முகத்தின் உயரம் என்ன, அகலம் என்ன என்று தெரிவது போல, முகத்தில் மூக்கு புடைத்துக்கொண்டிருக்கிறது, கண்கள் கொஞ்சம் உள்வாங்கி இருக்கிறது, காது கொஞ்சம் பின்னாடி இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். அதாவது, முகத்தின் பாகங்கள் அணைத்தும் தட்டையாக அமைந்திருக்கவில்லை என்பதை நாம் கவனிக்கிறோம். இதைத்தான் தான் முப்பரிமாணம் என்கிறார்கள். 
 
எனில்... 
 
நாம் வரையும் காகிதம், படம் பிடிக்கும் படச்சுருள், இப்போது சென்சார் என எல்லாமே, இரு பரிமாணத்தன்மைக்கொண்டவைகள் தானே… அதில் எப்படி முப்பரிமாணத்தைக் கொண்டுவருவது..!?  (இங்கே 3D படங்களை கொண்டு வந்து குழப்பிக்கொள்ளாதீர்கள்)
 

 
 
அதாவது, ஒரு காகிதத்தில் முகத்தை வரைந்தால், அதில் கண்கள், மூக்கு, காது எல்லாம் தட்டையாக இருக்க கூடாது அல்லவா? குழந்தைகள் படம் வரைவதைக் கண்டிருப்போம், அதில் காது, மூக்கு, கண் என்று எல்லாம் இருக்கும், ஆனால் தட்டையாக இருக்கும். அதுவே ஒரு ஓவியர் வரைந்தால், அது நாம் நேரடியாக பார்ப்பதைப்போன்று இருக்கும் அல்லவா..!? 
 
அதற்கு காரணம் என்ன?
 
அதுதான், இருப்பரிமாணத்திரையில் முப்பரிமாணத்தைக்கொண்டுவருவது. 
 
உயரம், அகலம் மற்றும் ஆழம்.. Height X Width X Depth
 
சரி.. அதை எப்படி செய்வது..!?
 
ஒரு பொருளைப் படம் பிடிக்கும் அல்லது வரையும் கோணத்தை பொருத்தும், அதற்கு ‘ஒளி’ ஊட்டும் விதத்தைக் கொண்டும் அப்பொருளின் முப்பரிமாணத்தன்மை பதிவு செய்யலாம். 
 
முதலில், அப்பொருளின் முப்பரிமாணமும் தெரியும் படி கேமரா கோணத்தை (perspective) அமைப்பது.
 
பின்பு, முப்பரிமாணமும் தெரியும் படி ‘ஒளி’ ஊட்டுவது.
 
பொதுவாக, ஒரு பொருளின் மீது ஒளியைப் பாய்ச்சும் போது, அப்பொருளில் மேடானப்பகுதிக்கு கீழ்பக்கம் அல்லது அடுத்தப்பக்கம் நிழல் விழும், இதை நாம் அறிவோம் அல்லவா? காரணம் அங்கே மேடாக இருப்பதனால், அது ஒளியை தடுக்கிறது. ஒளி இல்லாததனால் அடுத்தப் பக்கத்தில் நிழல் உண்டாகிறது, மேலும் அப்பகுதி மேடான பகுதியைவிட ஆழத்தில் உள்ளது என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகிறதுதானே.
 
முகத்தை எடுத்துக்கொண்டால்.. வலது புறத்திலிருந்து ஒளியை பாய்ச்சும் போது, இடது புறம் நிழல் உண்டாகிறது. காரணம் முகம் தட்டையாக இல்லை. அது உருண்டையாக இருக்கிறது. மூக்கு பகுதி புடைத்துக்கொண்டிருப்பதனால், மூக்கில் அடுத்தப்பக்கத்தில் நிழல் விழும்.
 
இந்த வெளிச்சப்பகுதியும், நிழல் பகுதியும் தான், முப்பரிமாணத்தை தருகின்றன. 
 
This is an example of a portrait using flat lighting. Notice how there are very few shadows on the face. Here, the light was probably hitting the face directly and evenly.

This is an example of the opposite. Notice how the light is coming from one side, really bringing out the shadows around the nose and neck.

Photos: chasingheartbeats.com
 
முகம் தெரிகிறது (Normal Exposure Area) கூடவே மூக்குப்பகுதி புடைப்பாக இருப்பதனால், அங்கே ஒளி கொஞ்சம் அதிகமாக விழும் (High Light Area) பகுதியும், அதனுடைய நிழல் விழும் (Shadow Area) பகுதி என மூன்று நிலைகள் நாம் காண முடியும்.
 
Normal Exposure Area, High Light Area Shadow Area இது மூன்றும் அடிப்படை. 
 
ஒரு பொருளின், முப்பரிமாணமும் தெரிய, இவை மூன்றும் வேண்டும். 



 
 
 
எப்படி ஒருவர், நடிக்கும் போது, வசனம் பேசும் போதும் இது இயல்பாக இல்லை, செயற்கையாக இருக்கிறது என்று சொல்லுகிறோம்..? 
அவரின் நடிப்பு அல்லது வசனம், நம்பும் படியாக இல்லை, எதார்த்ததை மீறி இருக்கிறது, என்பதை உணர்வதனால்.
 
அதேதான் காட்சியிலும்.. இயல்பாக, எதார்த்தத்தில் இருப்பதைப்போன்று, முப்பரிமாணத்தன்மையைக் கொண்டுவருவதும் அவசியம். 
 
சிறந்த பேச்சில், ஏற்ற இறக்கம், கலைநயம், அழுத்தம் இருப்பதைப்போல, ஒளியிலும் செய்ய வேண்டியதிருக்கிறது. 
 
அது அடிப்படையான முப்பரிமாணத்தை பதிவு செய்வதோடு, கவன ஈர்ப்பு மற்றும் அழகுணர்ச்சியும் ஏற்படுத்துவது அவசியமாகிறது. 
 
இதற்கு ஒளியமைப்பில் 
 
Key Light
Fill Light
Back Light 
High Light
Rim Light 
Kicker 
 
என்று பல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. 
 
இப்புகைப்படத்தில் இருக்கும், இரண்டு படங்களில்..
 
சிலருக்கும் ‘படம் A’ பிடித்திருக்கிறது. அதன் சரிதான். அதன் இயல்பு தன்மை நம்மை கவர்கிறது. என்றாலும்..
 
பெரும்பாலானோருக்கு ‘படம் B’ பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், அது வெளிப்படுத்தும் முப்பரிமாணத்தன்மை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏற்படி அது ஒளி ஊட்டப்பட்டிருக்கிறது. உருண்டை வடிவம் நன்கு தெரியும்படி இருக்கிறது. 
 
- அது வட்டமாக இருப்பதை தெரிவிப்பதற்கு ஏற்ற ‘ Back Light’ 
 
- உருண்டை வடிவம் தெரிவதற்கு ஏற்ற.. High Light Area and Shadow Area
 
- பிறவற்றோடு கலந்துவிடாமல் (merge) இருப்பதற்கு அமைக்கப்பட்ட Shallow Focus, Foreground, Background Objects..
 
- கூடவே.. எலுமிச்சை பழத்தில் வண்ணத்தை எடுத்து காட்டும், பின்புற வண்ணம்.. ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 
 
அதனால், பார்த்தவுடன் நம்முடைய கவனத்தை அது ஈர்க்கிறது. 
 
Photography Cinematography இருத்துறையிலும் Lighting பற்றி பேசுவதற்கு பல நுணுக்கங்கள் இருக்கிறது. அடிப்படையிலிருந்து துவங்குவோம்.
 
‘Zone System’ என்றொரு பார்வையும் இருக்கிறது. அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் பேசுவோம்.  
 
 
 
இரண்டு படங்களில் வித்தியாசத்தை, சிலர் குறிப்பிட்டது மட்டும் இங்கே
 
—————————————
 
படம் A
 
எலுமிச்சை பழங்கள், பழுத்த நிலையில், நெருக்கத்தில் looseயில் அடுக்கிய வாட்டத்தில் வைக்கப்பட்டு.. camera கோணத்தை top angleயில் வைத்து, அதே கோணத்தில் ஒளியை படறசெய்து எடுத்த புகைப்படம். 
கோணம் முழுவதும் வெறும் மஞ்சள் நிறம். வெறுமை நிறைந்த எளிமையான பதிவு. 
 
படம் B
 
எலுமிச்சை பழங்கள், ஒரு flatயான பகுதியில் வைக்கப்பட்ட நிலையில், camera கோணத்தை side angleயில் வைத்து, ஒளி வடிவமைப்பு மேற்குப்புறத்திருந்து தெறிக்கிறது. பழங்கற்கிடையில் நிழலும் காணமுடிகிறது., backgroundயில் இருளும் தெரிகிறது. வெறும் எலுமிச்சை நிறம் மட்டுமில்லாமல், பல வண்ணங்கள் இந்த புகைப்படத்தில் உணறலாம். 
 
படம் A எலுமிச்சை பழங்கள் தூங்குகின்றன..
படம் B ஒரு எலுமிச்சை பழத்தின் கதை இது..
  • Arun Patrice Manicom
 
——————————————
படம் B
ஹைலைட்  சடோ இருக்கு.. பெக்ரவுண்ட் இருக்கு
ஒரு ரிம் லைட் எப்பக்ட் திரிடி சேப் தருது...
ஒன்று மட்டும் தனித்து காட்டும் டெப்த் ஒப் பீல்ட் செமயா இருக்கு
அதிகளவு வர்ணம் இல்லாமல் பச்சை, மஞ்சள், கறுப்பு வர்ணம் பார்க்க கண்களுக்கு ஒரு குளிர்ச்சியை தருகிறது
படம் செய்யப்பட்ட ஆங்கிள் அதன் உண்மைத்தண்மையை பிரதிபலிக்கிறது. .ஐ லேவல் கண்டக்ட்....
  • Anoshan Daniel
 
———————————————
 
A-அனைவரும் செய்ய முடியும் B- ஒரு கலைஞனால் மட்டும் செய்ய முடியும்
  • P Bala Subramaniam
 
——————————————-
I think both pictures are nice. First picture A for me is harmony. It still has subtle differences in tones. May be a little more contrast in light could have helped. Looks like the Photographer shot it to establish the difference.
 
B Perfect BG, nice highlights roll off, shape established, use of DOF to isolate that one lemon. I think many would like this.
Myself being a crazy fellow would still prefer to see an improvised version of A.
  • Karthik Rajagopal
 
———————————————
A is Flat Light and No drama, Whereas B is an Over Head light it has a highlight and a shadow which is contrasty , one lemon stands out which creates drama !
  • Nelson Joseph 
 
———————————————
 
Why B? 
1. A is looks Flat with no perspective feel. 
2. The term Focus it self brings some sense of Attention to a visual object. Here in B we got our attention is Focused on a single fruit. 
3. There is not much"play of light (shadows) in A
4. The 'contrast" colour element is present in B 
5. At the end is aesthetics. That cant be simply said. Factor X. It may vary from person to person though.
  • Osai Chella 
 

 
 
Comments